Posts

Showing posts from January, 2018

பிரசண்ட விகடன் (இதழ்த் தொகுப்பு அரசியலை முன்வைத்து)

       பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பு வழியே தமிழ்ச்சமூக வரலாறு எழுதியல் என்பது சாத்தியப்பட்டது. நவீன அச்சு ஊடுக வளர்ச்சியின் பின்புலத்தில் நூல்கள் அச்சாக்கம் பெற்று அனைவரிடமும் பரவலானது. பல நிலைகளில்/ தன்மையில் எழுதப்பட்ட எழுத்துக்களைத் தொகுத்து நோக்கும்போது அதன்வழி ஒரு புது வரலாற்றைக் கட்டமைக்கலாம். அந்தப் பின்புலத்தில் இந்திய விடுதலைக்குப் பிறகு ஐரோப்பியர்களால் முன்னெடுக்கப்பட்ட பத்திரிகைத் துறை தமிழில் அதிவேக வளர்ச்சிப் பெற்று வந்தது. சமகால நிகழ்வுகளை முன்னிறுத்தியும் கடந்தகால சமூகப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடியும் எதிர்கால வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டும் இத்துறை இயங்கி வந்தது. அந்த வரிசையில் இந்தியவிடுதலைக்குப் பிறகு கலை இலக்கியப் பிரக்ஞையோடு, சமூக மற்றும் இனவுணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையில் சில பத்திரிகைகள் செயல்படலாயின. அந்த வரிசையில் இருப்பது ‘பிரசண்ட விகடன்’ இதழாகும்.      தனக்கு முந்தைய பத்திரிகைகள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான உணர்வுகளை ஊட்டின; தீவிர இலக்கிய உருவாக்கத்தினையும் அடையாளப்படுத்தின. இப்பத்திரிகையோ அதற்கு அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கியது.

திருக்குறள் யாப்பியல் ஆய்வுகள் (பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டு ஆய்வுகளை முன்வைத்து)

தமிழ்ச் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அறியப்பட்ட நூல்களுள் ஒன்று திருக்குறள். எழுத்தறிவு பெற்றோர், பெறாதோர் என அனைவரும் திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் அறிந்துவைத்துள்ளனர். ஒப்பீட்டியல், பொருண்மையியல், அறவியல், அரசியல், சமயவியல் எனப் பன்முகப் பரிமாணங்களில் திருக்குறள் குறித்த ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவரும் கன்பூசியசும், திருக்குறளும் பௌத்தமும், திருக்குறளும் மனுதர்மமும் திருக்குறளில் மேலாண்மை, திருக்குறளில் அறிவியல், திருக்குறளில் ஆளுமைத்திறன், திருக்குறளில் மருத்துவம், திருக்குறளில் வேளாண்மை, திருக்குறளில் உளவியல், திருக்குறளில் தத்துவம், திருக்குறளில் ஒற்றுமை, திருக்குறளில் மக்கள், திருக்குறளில் சுற்றுச்சூழல் திருக்குறளில் அறம், திருக்குறளில் பெண்ணின் பெருமை, திருக்குறளில் கல்வி, திருக்குறளில் ஆட்சிமுறை, திருக்குறளில் அரசியல், திருக்குறளில் புதுமையும் புரட்சியும், திருக்குறளில் சித்தர் நெறி, திருக்குறளில் நட்பு, திருக்குறளில் சுற்றம், திருக்குறளில் ஒழுக்கம், திருக்குறளில் ஈகை, திருக்